Categories
மாநில செய்திகள்

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் இன்று (பிப்.19) காலை 7 மணி அளவில் தொடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் வாக்குப்பதிவு மிகவும் குறைந்த அளவிலேயே பதிவாகியுள்ளது.

அதாவது காலை 9 மணி நிலவரப்படி சென்னையில் 3.96 சதவீதம், திருவள்ளூரில் 6.25 சதவீதம், ராணிப்பேட்டையில் 7.70 சதவீதம், திருப்பூரில் 8.09 சதவீதம், கோவையில் 8.60 சதவீதம், வேலூரில் 8.82 சதவீதம், திருவண்ணாமலையில் 9.21 சதவீதம், கடலூரில் 10.11 சதவீதம், காஞ்சிபுரத்தில் 11.02 சதவீதம், விழுப்புரத்தில் 11.37 சதவீதம், அரியலூரில் 12 சதவீதம், தேனியில் 12 சதவீதம், திண்டுக்கல்லில் 12.01 சதவீதம், சேலத்தில் 12.97 சதவீதம், திருச்சியில் 13 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

Categories

Tech |