Categories
மாநில செய்திகள்

நாமக்கல் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்…. காரணம் என்ன?…. பரபரப்பு…..!!!!!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டத்திற்கு உட்பட்ட வேலூர் பேரூராட்சி வார்டு மறுவரையறை செய்ததில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும், மாற்றியமைக்காததைக் கண்டித்தும் குப்புச்சிபாளையம் கோவில்காடு மற்றும் ராஜா நகர் பகுதி மக்கள் கருப்புக்கொடி ஏந்தி மற்றும் கருப்பு வில்லைகள் அணிந்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது.

அதாவது வேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் இருக்கிறது. பேரூராட்சியிலுள்ள 18 வார்டுகளையும் வாக்காளர்கள் எண்ணிக்கையைக் கொண்டு அனைத்து வார்டுகளிலும் மறு வரையறை செய்யப்பட்டது. இதன்படி வேலூர் பேரூராட்சியின் 3-வது வார்டு பகுதியில் இருந்த கோவில்காடு மற்றும் ராஜா நகர் பகுதியில் இருந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட வாக்குகளை ஒழுகூர்பட்டி 2-வது வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஒழுகூர்பட்டியில் உள்ள குப்புச்சிபாளையம் கோவில் காடு மற்றும் ராஜா நகர் பகுதிக்கு இடையில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவு இருப்பதால் ஒழுகூர் பட்டிக்கு அருகில் உள்ள பகுதியை அந்த வார்டுடன் இணைத்ததை விடுவிக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்து கோரிக்கை விடுத்தனர். இதனை ஆய்வு மேற்கொண்ட பேரூராட்சி உதவி இயக்குநர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.

ஆனால் மறுசீரமைப்பு முடிவுகளில் எந்தவித மாற்றமும் செய்யாத நிலையில் தற்போது பேரூராட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவில் காடு மற்றும் ராஜா நகர் பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் தங்களது வாக்குகளை ஒழுகூர்பட்டியிலிருந்து விடுவித்து தங்களுக்கு மிக அருகில் உள்ள 5-வது வார்டுடன் இணைக்க வேண்டும் என்று கோரி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Categories

Tech |