ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாதாகியுள்ளது .
இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையேயான வர்த்தக தொடர்பை மேம்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி18) கையொப்பம் ஆகிறது. பிரதமர் நரேந்திர மோடியும் ஐக்கிய அரபு அமீரகத்து இளவரசரான ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான்னும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி18 ) அன்று காணொளி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்யுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக ஐக்கிய அரபு அமீரக இந்திய தூதர் சஞ்சிவ் வியாழக்கிழமை அன்று தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில் அந்த ஒப்பந்தமானது இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தக தொடர்பை வலுப்படுத்தவும் தற்போது இரு நாடுகளுக்கு இடையே சுமார் 42 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது எனவும் இது கடந்த 5 ஆண்டுகளில் 70 கோடியாக அதிகரிக்கும். மேலும் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையேயான நல்லுறவு அதிகரிக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்றார்.
இரு நாட்டுத் தலைவர்களின் காணொளி சந்திப்பின் போது பல்வேறு முக்கியமான ஒப்பந்தங்கள் கையொப்பம் ஆக உள்ளதாக ஐக்கிய நாடு அரபு அமீரகத்தில் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மூன்றாவது பெரும் வர்த்தக கூட்டாளியாக ஆகிய நாடு அமீரகம் திகழ்கிறது. இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது.கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிற்கும் அந்நாட்டுக்கும் இடையேயான நல்லுறவு மேம்பட்டு வருகிறது. மேலும் பிரதமர் மோடி 2015,2018,2019 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அல் நயான் 2016, 2017 ஆண்டுகளில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.