தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
தற்போது தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் சர்கார் பட பாணியில் அமெரிக்காவில் இருந்து வந்து வாக்களித்து தனது ஜனநாயக கடமையை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபர் நிறைவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.