அண்மையில் முடிந்த சிவகார்த்திகேயனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி கூறி இணையத்தில் பதிவிட்டுள்ளார் எஸ்.கே.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். இவர் நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். சிவகார்த்திகேயன் கடைசியாக சிபி சக்கரவர்த்தி இயங்குகின்ற டான் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்திருக்கின்றனர். மேலும் இப்படத்தில் முன்னணி நடிகர்களான எஸ்.ஜே.சூர்யா, காளி வெங்கட், சிவாங்கி, புகழ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்தை சிவகார்த்திகேயன் புரோடக்சன்ஸ், லைகா நிறுவனம் சேர்ந்து தயாரிக்கின்றது மற்றும் அனிருத் இசையமைக்கின்றார். மேலும் இத் திரைப்படமானது வருகின்ற மார்ச் 25ஆம் தேதி வெளியாக இருக்கின்றது.
Thank you and love you all ❤️🙏 pic.twitter.com/DgGxdqVeoO
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 18, 2022
இவர் சென்ற பிப்ரவரி 17-ஆம் தேதி தனது 37வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்நிலையில் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி கூறும் விதமாக ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மேலும் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய நண்பர்கள், மீடியாக்கள், ரசிகர்கள், ரசிகைகள் உள்ளிட்ட அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்-எஸ்.கே. தன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பாசத்துக்குரிய ரசிகர்களுக்கு தொடர்ந்து நல்ல திரைப்படங்களை தருவேன் எனவும் கூறியுள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த டுவிட்டர் பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“வாழ்த்து கூறிய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி”…. உருகும் எஸ்.கே ரசிகர்கள்…!!!