ஆண்டாள்- ரங்கமன்னாருக்கும் அன்ன கொடை உற்சவம் நடைபெற்றுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் அன்னக்கொடி உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று மாசி மகத்தை முன்னிட்டு அன்னக்கொடி உற்சவம் நடைபெற்றது.
இதில் ஆண்டாளுக்கும் மன்னருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு 50 கிலோ தயிர் சாதம் தயார் செய்யப்பட்டு ஆண்டாளுக்கும் ரெங்கமன்னாருக்கும் படைக்கப்பட்டது. இந்த திருவிழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். அதன் பின்னர் வந்த பக்தர்களுக்கு தயிர்சாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.