தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது..
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார். இதையடுத்து நடிகர் அருண் விஜய் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார். கவிஞர் வைரமுத்து சென்னை கோடம்பாக்கம் வாக்குச்சாவடியில் தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றினார். நடிகர் விஜய் வாக்களிக்கும் நேரம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சிவப்பு நிற காரில் வந்து வாக்களித்தது குறிப்பிடத்தக்கது..