Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பற்றி எரிந்த தீ…. விவசாயிகள் அதிர்ச்சி…. கடலூரில் பரபரப்பு….!!

கரும்பு தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் விவசாயியான பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் கரும்பு தோட்டம் இருக்கின்றது. இந்நிலையில் இவரின் கரும்பு தோட்டத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் அங்கு திரண்டு சென்றனர். பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர்.

Categories

Tech |