சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள சேப்பாக்கம் பகுதியில் அம்சா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் விஜய் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அம்சா தனது 17 வயதுடைய பிரகாஷ் என்ற மகனுடன் வசித்து வந்துள்ளார். 9-ஆம் வகுப்பு வரை படித்த பிரகாஷ் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். இந்நிலையில் பிரகாஷ் தனது தாயிடம் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால் அம்சா மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுக்காததால் மன உளைச்சலில் இருந்த பிரகாஷ் நள்ளிரவு நேரத்தில் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.