Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஐயோ எனக்கு வலி தாங்க முடியல!!…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. விருதுநகரில் பரபரப்பு ….!!

வயிற்று வலியில் கூலித்தொழிலாளி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர்‌ மாவட்டத்தில் உள்ள மேட்டமலை கிராமத்தில் கூலித் தொழிலாளியான சுந்தர செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் வயிற்று வலி ஏற்பட்ட போது வலி தாங்க முடியாத சுந்தர செல்வம் தனது வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீ குறித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சுந்தர செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார் ‌.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுந்தர செல்வத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |