தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 40 வருடங்களாக குடியிருந்து வரும் நரிக்குறவர் இன மக்கள் முதன் முறையாக வாக்களித்துள்ளனர். இது குறித்து ட்வீட் செய்துள்ள தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இவர்கள் முதன்முறையாக வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியிருப்பது பெரும் மகிழ்வை தருவதாக தெரிவித்துள்ளார்.