Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளின் வாயிலாக குடும்ப அட்டைதாரர்கள் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் பலசரக்கு பொருள் என்று மலிவான விலையில் பொருட்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில் குடும்ப அட்டைகள் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்ட பின் ஸ்மார்ட் கார்டுகள் அதற்கான கருவியில் ஸ்கேன் செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த முறையில் யார் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்க முடியும்.

இதில் மோசடியை தவிர்ப்பதற்காக குடும்ப அட்டைதாரர்களே ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்களை வாங்க கைரேகை பதிவு முறை அமல்படுத்தப்பட்டது. இந்த முறையில் குடும்ப அட்டையில் இடம்பெற்றிருப்பவர்களில் யாராவது ஒருவர் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று கைரேகை பதிவு செய்த பின்பே பொருட்கள் வாங்க முடியும். இம்முறையில்தான் அனைத்து ரேஷன் கடைகளிலும் தற்போது பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் சமீபகாலமாக கைரேகை பதிவு இயந்திரங்களில் தொலைதொடர்பு சிக்னல் மற்றும் சர்வர் பாதிப்பு போன்ற காரணங்களால் கைரேகை பதிவு செய்வதில் பாதிப்பு ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியது. இதனால் ரேஷன் பொருட்களை பெற முடியாமல் கார்டுதாரர்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இந்த பிரச்சனைக்கு தீர்வுக்காணும் வகையில் கூட்டுறவு துறை ரேஷன் கடை ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ரேஷன் கார்டின் துரித குறியீட்டை கருவியில் ஸ்கேன் செய்து, கார்டு எண்ணை கருவியில் பதிவிட்டு பொருட்கள் வழங்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது..

Categories

Tech |