Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கதறி அழுத பெண்…. அத்துமீறிய முதியவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

வாய் பேச முடியாத பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பட்டுவாம்பட்டி கிராமத்தில் 32 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான இந்தப் பெண் தனியாக வசித்து வருகிறார். அப்போது தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் பெருமாள் என்ற கூலி தொழிலாளி சில நாட்களுக்கு முன்பு தனியாக வசிக்கும் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கதறி அழுதுள்ளார். பின்னர் உறவினர்கள் மூலமாக அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெருமாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |