21 வயது பூர்த்தியாகாத ஒருவர் தன்னை விட வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அவரை தண்டிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
21 வயது பூர்த்தி அடையாத ஒரு ஆண் 21 வயது பூர்த்தி அடைந்த ஒரு பெண்ணை அதாவது வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொள்வது குழந்தை திருமணம் ஆகாது என்று நீதிபதி மோகன் சந்தானம் தலைமையிலான அமர்வு முடிவு செய்துள்ளது.
17 வயது சிறுவன் ஒருவன் 21 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்கு எதிரான வழக்கில் சட்டப்பிரிவுகளை மேற்கொள் காட்டிய நீதிபதிகள் தன்னைவிட வயதில் பெரிய பெண்ணை மணந்ததற்காக ஆண் மகனையும், சிறுவனை மணந்ததால் அந்த பெண்ணையும் தண்டிக்க முடியாது என்று தெரிவித்தனர்.