நடிகர் விமல் “விலங்கு” வெப்சீரிஸ் பற்றி பழைய பத்திரிகையாளர்கள் பேட்டியில் கூறியது தற்போது உண்மையாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விமல் தற்பொழுது “விலங்கு” சீரிஸில் நடித்துள்ளார். இதை பிரசாத் பாண்டிராஜ் இயக்கி இருக்கின்றார். இந்த வெப்சீரிஸில் முன்னணி நடிகர்களான இனியா, முனிஷ்காந்த் பாலா சரவணன், ஆர்.என்.ஆர் மனோகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த வெப்சீரிஸானது ஜீ5 ஓடிடியில் வெளியானது. இந்த சீரிஸானது மர்டர் மிஸ்டரியை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. காட்டுப் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு பிணம் கண்டெடுக்கப்படுகிறது. அந்தப் பிணம் யாருடையது, கொலை செய்தவர் யார்? போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் விலங்கு கதையானது அமைந்திருக்கின்றது.
இக்கதையானது திருச்சி மாவட்டத்தில் உள்ள வேம்பூர் காவல் நிலையத்தில் நடந்த 2 உண்மை சம்பவங்களை ஒரே கதையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இக்கதையானது ஏழு அத்தியாயமாக பிரிக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது. இப்படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு காவல்நிலைய செட்டிங்கில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வெப்சீரிஸ் செய்தியாளர்கள் சந்திப்பின்போது விமல் கூறியதாவது, “எனக்கும் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இந்த விலங்கு வெப்சீரிஸானது மிகப்பெரிய கம்பேக்காக இருக்கும்” என கூறியிருந்தார். அவர் கூறியது போல இது பெரிய கம்பேக்காக இருக்கின்றது. இந்த வெப் சீரிஸ் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது.