தமிழ்நாடு அரசு தனது ஊழியர்களுக்கு தேவையான அனைத்து விதமான வசதிகளையும் செய்து வருகிறது. அரசின் அனைத்து நிலை ஊழியர்களும் சேர்ந்து பணியாற்றுவதன் மூலமாகதான் அரசின் அனைத்து நலத்திட்ட பணிகளும் மக்களை சென்று சேர்க்கிறது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் விடுக்கும் கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்றி விடுகிறது. மேலும் அவர்களுக்கான சிறப்பு திட்டங்களையும், சலுகைகளையும் அரசு அறிவித்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் படிகளையும் உயர்த்தி அரசு அறிவித்து வருகிறது. இதனிடையில் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் பணி நிலைகளின் அடிப்படையில் கொடுப்பனவுகள் அளிக்கப்படுகிறது. அவற்றில் வீட்டு வாடகை படியும் ஒன்றாகும். இதேபோன்று தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் அரசு ஊழியர்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக வாடகை அளவு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தற்போது அரசு ஊழியர்களின் சம்பளம் துறையில் இருந்து அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் அரசு குடியிருப்பில் இருக்கும் அரசு ஊழியர்கள் பெறும் வீட்டு வாடகைப்படி மொத்த சம்பளத்தில் சேர்க்கக்கூடாது. அதேபோன்று வீட்டு வாடகைப்படி கழிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் இனிமேல் சம்பளம் நடைமுறைபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.