வாக்களர்கள் பால் பாக்கெட்டுகளை ரோட்டில் எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நகராட்சியில் இருக்கும் 21 வார்டு கவுன்சிலர் பதவிக்கு தற்போது தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக 46 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 19-ஆவது வார்டுக்குட்பட்ட கரியப்பாநகர் பகுதியில் தி.மு.க-வினர் வாக்காளர்களுக்கு ஒரு லிட்டர் பால் பாக்கெட்டுகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை வாங்கிய 30-க்கும் அதிகமான பெண்கள் தங்களுக்கு பால் பாக்கெட் வேண்டாம் என அவற்றை தெருவில் வீசி எறிந்துள்ளனர்.
இது பற்றி தகவலறிந்த அப்பகுதி அ.தி.மு.க-வினர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தெருவில் வீசப்பட்ட பால் பாக்கெட்டுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி உள்ளனர். இதைப்போல் 7-வது வார்டுக்குட்பட்ட கோட்டைமேடு பகுதியில் தி.மு.க-வினர் வாக்காளர்களுக்கு பால் பாக்கெட்டுகளை கொடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க-வினர் இது சமந்தமாக காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர்.