Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஆலோசனை கூட சொல்ல மாட்டாங்க” நாசம் அடையும் பயிர்கள்…. விவசாயிகள் வருத்தம்….!!

படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்காததால் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளம் உள்பட 6 பயிர்கள் மற்றும் பருவ கால பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டு அதனை பராமரித்தும் வருகின்றனர். அதன்பின் கடந்த மாதம் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் பயிர்களில் அதிக அளவில் படைப்புழு தாக்குதல் இருந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது, படைப்புழு தாக்குதலினால் செடிகள் வளர்ந்து வருவது மட்டுமின்றி அவற்றை கட்டுப்படுத்த என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறோம்.

ஆனால் தற்போது இருக்கும் நிலைமையை பார்த்தால் சாகுபடி செய்ததற்கான செலவை எடுக்க முடியுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகளிடம் படைபுழு தாக்குதலை கட்டுப்படுத்த எந்த வகையான மருந்து கொடுக்க வேண்டும் என ஆலோசனை கேட்டாலும் அதற்கும் அவர்கள் சரியான பதில் அளிப்பதில்லை. இதனை தொடர்ந்து அதிகாரிகள் மக்காச் சோளப் பயிர்களை நேரில் ஆய்வு செய்து படைபுழு தாக்குதலை கட்டுப்படுத்த செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குமாறு கூறியுள்ளனர்.

Categories

Tech |