Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

80 க்கு மேற்பட்ட உபகரணங்கள் …. 100% வாக்குகள் ….. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை….!!

பொதுமக்கள் தங்களது 100 சதவீத வாக்குகளை அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் இருந்து வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார். அதில் தேர்தல் மேற்பார்வையாளர் தங்கவேல், ஆர்.டி.ஓ. முத்து கழுவன், நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தேர்தலுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், படிவங்கள், எழுது பொருட்கள், மை வகைகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது 100 சதவீத வாக்குகளை செலுத்தி  ஜனநாயக கடமையை செய்ய  வேண்டும் என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |