தி.மு.க. வேட்பாளரை தாக்கிய அ.தி.மு.கவினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள 19-வது வார்டில் தி.மு,க. சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று அ.தி.மு.காவை சேர்ந்த முருகேசன் உள்ளிட்ட சிலர் செந்தில்குமாரின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர்.
இதனையடுத்து முருணேசன் மற்றும் சிலர் செந்தில்குமாரை கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதன்பின் முருகேசன், அமிர்தம், ஜெயராம், சண்முகசுந்தரம், மாரிஸ், ஆறுமுகபாலாஜி ஆகியோர் தன்னை தாக்கியதாக செந்தில் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.