Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள புதுதாமரைப்பட்டி பகுதியில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா கடந்த சில நாட்களாக தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் தலைவலி குறையவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கீதா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த சங்கீதாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சங்கீதா பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |