கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் அடியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டாரா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.