Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுமார் 500 கிலோ எடை…. வலையில் சிக்கிய ராட்சத மீன்…. போட்டி போட்டு ஏலம் எடுத்த வியாபாரிகள்…!!

மீனவர்களின் வலையில் சிக்கிய ராட்சத மீனை வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விசைப்படகு மீனவர்கள் கடலில் தங்கியிருந்து மீன் பிடிக்க அனுமதி வழங்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தை நடந்து பிறகு மீனவர்கள் 4 நாட்கள் கடலில் தங்கி இருந்து மீன் பிடிக்கும் 6 மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். இந்நிலையில் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடந்த 14-ஆம் தேதி முதல் ஆழ்கடலில் தங்கியிருந்து மீன் பிடித்துள்ளனர்.

அதன்பின் நேற்று முன்தினம் மீனவர்கள் கரைக்கு திரும்பினர். இதில் ஒரு விசைப்படகில் இருந்த மீனவர்களின் வலையில் ராட்சத மீன் ஒன்று சிக்கியிருந்தது. அதன் எடை 500 கிலோ ஆகும். அந்த மீனை விசைப் படகில் இருந்து கிரேன் மூலம் தூக்கி ஏல கூடத்திற்கு கொண்டு சென்றனர். அதன்பிறகு வியாபாரிகள் போட்டி போட்டு அந்த மீனை ஏலம் எடுத்து லாரியில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

Categories

Tech |