காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தீபக்தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீபக்கின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிரபு காதலித்த பெண் கடந்த மாதம் இறந்துவிட்டார். இதனால் துக்கம் தாங்காமல் தீபக் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.