ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு மீண்டு எழுந்த பெண்ணான லஷ்மி அகர்வாலின் வாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து உருவானத் திரைப்படம் சப்பக். லஷ்மி அகர்வால் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்கும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் லஷ்மி அகர்வால் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் டைட்டில் ட்ராக் பாடல் வெளியிடப்பட்டது. அப்பாடலில் உள்ள சில வரிகளை அங்கிருந்த பாடகர் சங்கர் மகாதேவன் பாடினார். அதை கேட்ட லஷ்மி அகர்வால் மேடையிலேயே மனமுடைந்து கண்கலங்கினார்.
லஷ்மி அருகே அமர்ந்திருந்த தீபிகா, கண்கலங்கிய லஷ்மிக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவர் அழுததை கண்ட தீபிகாவும் கண்கலங்கினார். இச்சம்பவம் அங்கிருந்த பலருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேக்னா குல்சரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சப்பக் திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி ரீலிஸ் ஆகிறது.