நடிகை சமந்தா அரபிக் குத்துப்பாடலுக்கு நடனமாடியதை பார்த்த பூஜா ஹெக்டே பாராட்டியுள்ளார்.
முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் அரபிக் குத்துப்பாடல் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகின. இப்பாடல் வெளிவந்த நான்கு நாட்களிலேயே 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்று பாராட்டை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இப்பாடலுக்கு பல பேர் ரீல்ஸ் செய்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை சமந்தா அரபிக் குத்துப்பாடலுக்கு விமான நிலையத்தில் நடனமாடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது. இவ்வீடியோவைப் பார்த்த நடிகை பூஜா ஹெக்டே “Amazee” என குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருக்கிறார்.
சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்பு சமந்தா இணையத்தில் பகிர்ந்த புகைப்படத்தை பார்த்த பூஜா ஹெக்டே இது அவ்வளவு ஒன்றும் அழகாக இல்லையே என கமெண்ட் தெரிவித்திருந்தார். இந்நிகழ்வினால் இரு நடிகைகளின் ரசிகர்களுக்கிடையே இணையத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை யாரோ ஹேக் செய்து இருக்கிறார் என்று கூறியிருந்தும் இச்சண்டை முடிவுக்கு வரவில்லை. தற்பொழுது பூஜா ஹெக்டே சமந்தாவின் நடனத்தை பாராட்டியது இப்பிரச்சனைக்கு முடிவை தந்துள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.