அரசு மருத்துவமனையில் 5 மாத ஆண் குழந்தையின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் அரசு லாலி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு, தீவிர விபத்து சிகிச்சை பிரிவு என 10 கும் மேற்பட்ட பிரிவுகள் அமைந்துள்ளது. இந்நிலையில் மகப்பேறு பிரிவில் உள்ள கழிவுநீர் தொட்டியில் திடீரென அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதார பணியாளர்கள் இந்த கழிவுநீர் தொட்டியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கழிவு நீர் தொட்டிக்குள் குழந்தையின் சடலம் ஒன்று மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு உடனே தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின்படி அங்கு வந்த மருத்துவமனை நிர்வாக குழு பிறந்து ஐந்து மாதங்களே குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளனர். அதன்பிறகு மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து குன்னூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.