நடிகர் ரஜினி மற்றும் சன் பிச்சர்ஸ் இடையே புதிய ஒப்பந்தம் நடைபெற்றிருக்கின்றது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இது பாக்ஸ் ஆபிஸில் வசூலை பெற்றிருந்தாலும் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் ரஜினி தனது அடுத்த திரைப்படத்தை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருந்தார். இந்நிலையில் நெல்சன் திலீப் குமாரின் கதையைக் கேட்ட ரஜினிக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. ரஜினியின் அடுத்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகின்றார் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் இப்படம் இருக்க வேண்டும். முன்பு பிடித்த மார்க்கெட்டை மீண்டும் பெறவேண்டும் என்பதற்காக ரஜினி படத்திற்கான வேலைகளை பார்த்துபார்த்து செய்து வருகின்றார்.
இந்நிலையில் இப்படத்திற்கு ஐஸ்வர்யா ராய் நடிக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கேட்டிருந்தார். ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றால் உங்களின் சம்பளத்தில் 20 கோடி குறைக்க வேண்டும் என நிறுவனம் கூறியது. யோசித்து முடிவெடுத்த ரஜினி, சம்பளத்தை குறைத்துக் கொள்கிறேன். ஆனால் கிடைக்கும் லாபத்தில் ஒரு சிறிய பங்கினை தரவேண்டும் என ஒப்பந்தம் போட்டுள்ளார். ஒவ்வொரு பகுதியிலும் லாபத்தின் பங்கினை தரவேண்டும் என கூறியிருந்தார் ரஜினி. சற்று ஆலோசித்த சன் பிக்சர்ஸ் இறுதியில் ஒப்புக்கொண்டது. இதை மதிப்பீட்டு பார்த்தால், படம் எதிர்பார்த்தபடி ஓடினால் ரஜினியின் சம்பளம் 130 கோடி வரை கிடைக்குமாம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.