Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…”தொழில் நடைமுறை திருப்தியாக இருக்கும்”.. ஆதாய பண வரவு கிடைக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…!!  உங்கள் மனம் செயலில் புத்துணர்ச்சி பிறக்கும். தொழில் வியாபார நடைமுறை திருப்திகரமாக இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோக  பொருட்களை வாங்கக்கூடும். இன்று ஞாபகத்திறன் அதிகரிக்கும். விளையாட்டில் ஆர்வம் செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள். எந்த ஒரு விஷயத்தையும் கொஞ்சம் கவனமாகவே நீங்கள் செயல்படுத்துவது நல்லது.

குடும்பத்தில் அமைதி உண்டாகும். எதிலும் நிதானமாக ஈடுபட்டு மற்றவர்களின் ஆலோசனையும் கேட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்துமுடிப்பீர்கள். தெய்வீக ஈடுபாடு இன்று அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். செய்த்தொழிலில் கூட நல்ல முன்னேற்றம் இருக்கும். தனவரவிற்கு எந்த குறையும் இல்லை.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |