ஐசிஐசிஐ வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கான சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை நீட்டித்துள்ளது.
கொரோனா நெருக்கடி காலத்தில் வங்கிகள் மக்களுக்கு உதவும் வகையில் சில திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளன. அந்த வகையில் சீனியர் சிட்டிசன் பயனடையும் வகையில் சிறப்பு வைப்பு நிதி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஐசிஐசிஐ, பேங்க் ஆஃப் பரோடா, எஸ்பிஐ ,எச்டிஎஃப்சி ஆகிய வங்கிகள் இந்த சிறப்பு வைப்பு நிதி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களின் மூலம் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி விகிதம் வழங்கப்பட உள்ளது.
மேலும் எஸ்பிஐ வங்கி சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை சீனியர் சிட்டிசன்கள் பயனடையும் வகையில் செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது ஐசிஐசிஐ வங்கியும் தனது ‘Golden Years FD’ என்ற சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை ஏப்ரல் மாதம் 8 வரை நீட்டித்துள்ளது. அந்த வகையில் சிறப்பு வைப்புநிதியில் சீனியர் சிட்டிசன்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதத்தை ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி,
7 – 14 நாட்கள் : 3%
15 – 29 நாட்கள் : 3%
30 – 45 நாட்கள் : 3.50%
46 – 60 நாட்கள் : 3.50%
61 – 90 நாட்கள் : 3.50%
121 – 150 நாட்கள் : 4%
151 – 184 நாட்கள் : 4%
185 – 210 நாட்கள் : 4.90%
211 – 270 நாட்கள் : 4.90%
271 – 289 நாட்கள் : 4.90%
290 – 364 நாட்கள் : 4.90%
1 ஆண்டு – 389 நாட்கள் : 5.50%
390 நாட்கள் – 15 மாதங்கள் : 5.50%
15 மாதங்கள் – 18 மாதங்கள் : 5.50%
18 மாதங்கள் – 2 ஆண்டுகள் : 5.50%
2 ஆண்டு 1 நாள் – 3 ஆண்டுகள் : 5.70%
3 ஆண்டு 1 நாள் – 5 ஆண்டுகள் : 5.95%
5 ஆண்டு 1 நாள் – 10 ஆண்டுகள் : 6.35%
இந்நிலையில் சீனியர் சிட்டிசன்களுக்கு டபுள் ஜாக்பாட் கிடைக்கும் வகையில், எஸ்பிஐ வங்கி சிறப்பு வைப்பு நிதியை நீட்டித்த நிலையில் தற்போது ஐசிஐசிஐ வங்கியும் நீட்டித்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.