ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தர்பார்’. இந்த படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயந்தாரா நடிக்கிறார். மேலும் சுனில் ஷெட்டி , நிவேதா தாமஸ் , யோகி பாபு , தம்பி ராமையா , ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 09 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் புரமோஷன், ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகள் மும்முரமாக நடைப்பெற்றுவருகின்றன. இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கை குழுவானது யூ/ஏ (U/A) சான்றிதழை கொடுத்துள்ளது. இச்செய்தியை நடிகர் ஸ்ரீமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
🎬Darbar – Censored, UA Run Time 2 hrs 39 minutes 28 seconds/ 159 minutes. Thalaiver varraar lets get ready
— actor sriman (@ActorSriman) January 3, 2020