உக்ரேன் விவகாரத்தில் போர் பதற்றம் நீடித்துவரும் நிலையில் ரஷ்யா வெற்றிகரமாக ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
உக்ரேனின் எல்லையில் ரஷ்யா தங்களது ராணுவ படைகளை 1.90 லட்சம் வரை குவித்துள்ளது. இதனால் ரஷ்யா உக்ரைன் மீது எந்த நேரமும் போர் தொடுப்பதற்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க ரஷ்யா ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.
இது குறித்து ரஷ்யா, திட்டமிட்ட பயிற்சியின் ஒரு அங்கமாக இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து உக்ரைன் விவகாரத்தில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ரஷ்யாவின் இந்த ஏவுகணை சோதனை உலக நாடுகளுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.