நேற்று (பிப்.19) தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது.
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட வாரியாக இறுதி வாக்குப்பதிவு சதவீதம் :-
திருப்பூரில் 60.66 சதவீதம், அரியலூரில் 75.69 சதவீதம், விருதுநகரில் 69.24 சதவீதம், ராணிப்பேட்டையில் 72.24 சதவீதம், மதுரையில் 57.09 சதவீதம், நாமக்கல்லில் 76.86 சதவீதம், தஞ்சையில் 66 சதவீதம், மயிலாடுதுறையில் 65.77 சதவீதம், நாகையில் 69.19 சதவீதம், ராமநாதபுரத்தில் 68.03 சதவீதம், கள்ளக்குறிச்சியில் 74.36 சதவீதம், திருவாரூரில் 68.25 சதவீதம், தர்மபுரியில் 80.49 சதவீதம், கோவையில் 59.61 சதவீதம், திண்டுக்கல்லில் 70.65 சதவீதம், சென்னையில் 43.59 சதவீதம், சேலத்தில் 70.54 சதவீதம், தேனியில் 68.94 சதவீதம், திருச்சியில் 61.36 சதவீதம், நெல்லையில் 59.65 சதவீதம், நீலகிரியில் 62.68 சதவீதம், திருவண்ணாமலையில் 73.46 சதவீதம் ஆகும்.