தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வந்தனர். அதேபோல் அரசியல் கட்சி பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். ஆனால் தேர்தல்களில் எப்போதும் தவறாமல் வாக்களிக்கும் நடிகர் ரஜினிகாந்த் நேற்று வாக்களிக்க வராதது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எப்போதும் காலையிலேயே வாக்களிக்க வரும் ரஜினியின் நேற்று வாக்களிக்கவில்லை. அதேபோல் அஜித்தும் மும்பையில் இருப்பதால் வாக்களிக்க வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சிம்பு, தனுஷ், த்ரிஷா, வடிவேலு உள்ளிட்டோரும் கூட வாக்களிக்க வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.