பொது மக்களுக்கு பயன்படும் விதமாக புத்தக விற்பனை கண்காட்சி தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தெற்கு வீதி அருகில் மனோஜியப்பா வீதியில் ராமசாமி பக்தர் கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் வைத்து காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த புத்தக கண்காட்சியில் நாவல், கவிதைகள், இலக்கியம், பொதுஅறிவு, வரலாறு, கதைகள், ஜோதிடம், குழந்தை வளர்ப்பு, சுயமுன்னேற்றம், ஆன்மிக கதைகள், மருத்துவம், போட்டித் தேர்வு சம்பந்தமான நூல்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் வாலி, வைரமுத்து, ரமணி சந்திரன், கண்ணதாசன், சுஜாதா, பாலகுமாரன், கி.ராஜநாராயணன், கோவி மணிசேகரன், சாண்டில்யன் போன்ற கவிஞர்களின் நூல்கள் மற்றும் பல்வேறு எழுத்தாளர்களின் நூல்கள் போன்ற ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த புத்தக கண்காட்சி அடுத்த மாதம் 6 ம் தேதி வரை நடைபெறும் என புத்த கண்காட்சி பொறுப்பாளர் விஜயரங்கன் கூறியுள்ளார்.