Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா 3-வது அலைக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆசிரியர்களை அறிவுறுத்தியுள்ளது.

தற்போது பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களை தயார்படுத்தும் வகையில் முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. மேலும் தற்போது இந்த தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்னும் 2 வாரங்களில் விடைத்தாள்களை திருத்தி முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆன்லைன் வழியாக கல்லூரிகளில் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிவகங்கை மாவட்டத்தில் பேச்சுப் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு போட்டி மாவட்ட அளவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.

அதில் பள்ளி மாணவர்களுக்கு பிப்ரவரி 25-ஆம் தேதி காலை 9.30 மணிக்கும், பிற்பகல் 2 மணிக்கு கல்லூரி மாணவர்களுக்கும் போட்டிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள 04575-241487 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |