தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 30,635 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. சுமார்1.13 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் அரசியல் தலைவர்கள் அரசு உயர் அதிகாரிகள் சினிமா பிரபலங்கள் போன்ற பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர். மேலும் பண வினியோகம், வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு உள்ளிட்ட சலசலப்புக்கு மத்தியிலும் விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது என்பதை இறுதி வாக்கு சதவீதத்தை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதற்கிடையில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வாக்கு மையங்களுக்கு வெளியேயும் உள்ளேயும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்தாலும் ஒரு சில இடங்களில் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது அதன் காரணமாக ரோந்து பணிகளில் தீவிரப்படுத்த வேண்டுமென டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி அனைத்து மாநகர காவல் ஆணையர்களுக்கு மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது.
பல இடங்களில் சிறுசிறு பிரச்சினைகள் வந்தபோதும் உடனடி நடவடிக்கை எடுத்து பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட காவல்துறையினருக்கு தலைவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தேர்தல் பணி இன்னும் முடிவடையவில்லை. அதன் காரணமாக ரோந்து பணியை தீவிரப்படுத்த படவேண்டும் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு பெட்டிகள் எண்னும் இடத்தில் ஒப்படைத்த பின்னர் தலைமை அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பபடவேண்டும். மேலும் கண்காணிப்பு பணிகள் அடுத்த 3 நாட்களுக்கு தொடரும் எனவும் கூறியுள்ளார்.