இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இருப்பினும் சென்னையில் வாக்கு எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இதற்கு காரணம் வெறுப்பு அல்ல. நேற்று நிறைய மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதனால் வாக்கு எண்ணிக்கை குறைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் இன்று முதல் 22 ஆம் தேதி வரை குடியரசு தின அலங்கார ஊர்திகள் சென்னை மெரினாவில் வைக்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் சென்று வந்த அலங்கார ஊர்திகள் மக்களின் பார்வைக்காக மெரினாவில் மூன்று இடங்களில் வைக்கப்பட்ட உள்ளது. இதனை பொதுமக்கள் நேரில் கண்டு ரசிக்கலாம் என்று கூறியுள்ளார்.