தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகம் மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் புதுக்கோட்டையில் மட்டும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து பிப்ரவரி 20, 21, 22 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி போன்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மட்டும் பிப்ரவரி 23ஆம் தேதி மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலையில் லேசான பனி மூட்டம் நிலவும் என்றும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.