Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்….. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு பகுதியில் கோகுல்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி அவரது வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் கோகுல்ராஜ் அங்கு சென்றுள்ளார். அதன்பின் கோகுல்ராஜ் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கோகுல்ராஜ் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். ஒருகட்டத்தில் சிறுமி தனிமையில் இருக்க மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த கோகுல்ராஜ் உன்னுடன் உல்லாசம் அனுபவித்த செல்போன் படக்காட்சிகளை உனது பெற்றோரிடம் காட்டி விடுவேன் எனக் கூறி மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அடையாறு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோகுல்ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |