டாஸ்மாக் கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே இருக்கும் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் திடீரென இரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டு கடை முழுவதும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர்.
ஆனால் இந்த தீ விபத்தில் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் சேதமடைந்தது. இந்த டாஸ்மாக் கடையில் பொருத்தப்பட்டுள்ள 2 கண்காணிப்பு கேமராக்களும் கருகியதால் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.