Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற சகோதரர்…. சடலமாக மீட்கப்பட்ட தம்பதியினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வயதான தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்கட்டளை டாக்டர் ராமமூர்த்தி நகர் 2-வது பிரதான சாலையில் நம்பிராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிமெண்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு பாப்பா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் கிடையாது. இதில் நம்பிராஜன் உடல் நலம் சரியில்லாமலும், பாப்பா நுரையீரல் புற்றுநோயாலும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நம்பிராஜனின் சகோதரரான சுப்பிரமணி என்பவர் தொலைபேசி மூலம் அவரை தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால் நம்பிராஜன் அழைப்பை ஏற்காததால் சந்தேகமடைந்து சுப்ரமணி அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது நம்பிராஜனும் பாப்பாவும் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு சுப்ரமணி அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தம்பதியினரின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வயதான காலத்தில் தங்களை கவனித்துக்கொள்ள ஆள் இல்லாததால் மன உளைச்சலில் இருந்த தம்பதியினர் தற்கொலை செய்தது தெரியவந்தது.

Categories

Tech |