ஜாபுல் மாநிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜாபுல் மாநிலத்தில் ஷோகாக் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அன்று ஆழ்துளை கிணற்றின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தான். இந்த ஆழ்துளை கிணறு சுமார் 25 மீட்டர் ஆழம் கொண்டது. அதில் 10 மீட்டர் ஆழத்தில் சிறுவன் சிக்கிக் கொண்டான். இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் கயிறு கட்டி சிறுவனை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் செய்த முயற்சி பயன் அழிக்கவில்லை என்றதால் அங்கு நிலைமை மோசமானது. மேலும் ஜே.சி.பி. போன்ற இயந்திரங்களை பயன்படுத்தி மீட்புக் குழுவினர் முயற்சி செய்தனனர், ஆனாலும் சிறுவனை நெருங்க முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து அந்த சிறுவன் சுய நினைவோடு தான் இருக்கிறான் என்பதை உறுதி செய்ய அவரது தந்தை சிறுவனிடம் பேச்சுக் கொடுத்தபடி இருந்தார். அதற்கு சிறுவனும் தந்தையின் பேச்சுக்கு பதிலளித்த வந்தான். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் சிறுவனிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.
இந்த சிறுவனை 4 நாள் போராட்டத்திற்கு பின்பு ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்டனர். மேலும் ஹெலிகாப்டர் மூலம் சிறுவனை காபூலில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தயாராக இருந்தனர். ஆனால் ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்தச் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் நான்கு நாட்களாக மீட்புக்குழுவினர் போராடியது தோல்வியில் முடிந்தது.