Categories
மாநில செய்திகள்

அடடே…! ஆவின் பால் பாக்கெட்டில்…. இப்படியொரு விழிப்புணர்வா…? பாராட்டிய மக்கள்…!!!

பால் பாக்கெட்டுகளின்  வழியே ஆவின் நிறுவனம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

தமிழகத்தில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்நேற்று நடந்து முடிந்தது. இதையடுத்து  நேற்று காலையில் நூறு சதவீத வாக்கு பதிவினை உறுதி செய்வோம் என ஆவின் நிறுவனம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளது. மக்களில் பலரும் கண்விழிக்கும் தனது பால் பாக்கெட்டுகள் வழியே  இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை இந்நிறுவனம் முன்னெடுத்துள்ளது.

பால் பாக்கெட்டின்  இடது பக்க ஓரத்தின்  மையப்பகுதியில் 100 சதவீதம்வாக்களிப்போம்  என அச்சிடப்பட்டிருந்தது. இது ஆவின் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி  பொது மக்களிளிடமும்  பரவலாக வரவேற்பை பெற்றிருந்தது.

Categories

Tech |