Categories
மாநில செய்திகள்

“காணொலி மூலம் தேர்தல் பிரச்சாரம்”…. என்ன காரணம் தெரியுமா?…. முதல்வர் ஸ்டாலின் அளித்த விளக்கம்….!!!!

தமிழகத்தில் நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் முன்னதாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டார். இருப்பினும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களை சந்தித்து பேசாததால் பல விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.20) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக துணை அமைப்பு செயலாளர் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட போது பேசியதாவது, “கொரோனா பரவல் காரணமாக அரசு விதிப்படி நேரடி பிரச்சாரம் செய்யவில்லை.

எனவே தான் காணொலி வாயிலாக பேசினேன். இதனை சிலர் மக்களை சந்திக்க தைரியம் இல்லை என்று கூறினார்கள். எனவே தேர்தல் முடிவுக்கு பின்னர் மாவட்டங்களில் நடைபெறும் வெற்றி விழாக்களில் பங்கேற்பேன்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |