நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலானது முறைக்கேட்டுனே நடைபெற்றது என அதிமுக பிரமுகர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் 60.70 சதவீதம் வாக்குகள் பதிவானது. இவ்வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் இவ்வாக்குப்பதிவின் போது ஒரு சில இடங்களில் ஆளுங்கட்சியான திமுக முறைகேட்டில் ஈடுபட்டது என எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து அதிமுக சட்டப்பிரிவு இணைச்செயலாளர் பாபு முருகவேல் தேர்தல் ஆணையர் பழனிகுமாரை சந்தித்து புகார் அளித்துள்ளார். புகார் மனுவில் கூறியுள்ளதாவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடந்த வார்டுகளுக்கு மறுவாக்குப்பதிவு நடத்துமாறு குறிப்பிட்டிருந்தார்.
தேர்தல் ஆணையரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பாபு முருகவேல், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் பிறகுதான் வாக்குச்சாவடியில் நடந்த வாக்குப் பதிவுகள் எனப்படும் என தேர்தல் ஆணையர் கூறியுள்ளதாக கூறினார். இல்லையெனில் வெற்றி பெற்றவர்கள் தோல்வியடையவும் தோல்வியடைந்தவர்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறியிருக்கின்றார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலானது அசம்பாவிதங்களோடே நடந்தது. முறைகேடு நடந்த வார்டுகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும். வாக்குப்பதிவு எண்ணும் பொழுது திமுக என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதால்தான் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம் எனக் கூறியிருக்கின்றார். மேலும் மக்கள் நீதி மையம் கட்சியினர் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணையர் அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.