Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி…. சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி வழிபாடு நடத்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள டி. கொத்தப்பள்ளி கிராமத்தில் பழமை வாய்ந்த தர்மராஜா கோவில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளது. சுமார் 3 1/2 கோடி செலவில் கோவில் கோபுரங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்தது. இதனால் நேற்று கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு ஹோமங்கள், யாத்ரா தானம், தீர்த்த கலசங்கள் கோவிலில் வலம் வந்து கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

அப்போது பெங்களூருவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் கோவிலின் கோபுர கலசங்கள் மீது தூவப்பட்டன. இதனையடுத்து ஹெலிகாப்டர் கோவிலை பல முறை சுற்றி வந்து மலர்களை கோபுரத்தின் மேல் தூவியது. இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கண்டு சுவாமியை தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |