டெமு ரெயில் சேவை, விரைவு ரயில் சேவைகள் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் காரைக்குடி ரயில் வழித்தடங்களில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில் ரயில்களில் வேகத்தை அதிகரிக்கும் பொருட்டு, இருப்புப் பாதையின் தன்மை, தண்டவாள ஆய்வுகள் போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக ஆய்வாளர்கள் oms அதிவேக விரைவு ரயில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி ஆய்வு பணி நடைபெற்றது. திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வழியாக காரைக்குடி ரயில் நிலையம் வரை சென்று மீண்டும் அதே போல் காரைக்குடியில் இருந்து புறப்பட்டு முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள கிராசிங் பாதைகளில் இந்த ஆய்வானது நடைபெற்றுள்ளது.
மேலும் தற்போது 15 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும் முறையில் மணிக்கு 30 கிலோமீட்டர் என்ற வேகத்தில் இயக்கப்பட்டு திருவாரூர் ரயில் நிலையம் திரும்ப உள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த சோதனை ஓட்டத்தின் மூலம் தற்போது டெமு ரயில் சேவை மற்றும் விரைவு ரயில் சேவைகள் தொடர வாய்ப்புள்ளது என ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.