மனைவி உயிருக்குப் போராடும் நிலையில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மதுக்கூர் பகுதியில் அத்திவெட்டி சிவிக்காடு பகுதியில் சச்சிதானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயசித்ரா என்ற மனைவியும் ஹேம்நாத் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சச்சிதானந்தம் 2 மாதங்களாக தனது சொந்த ஊரில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். சச்சிதானந்திற்கும் அவருடைய மனைவி ஜெயசித்ராவுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ஜெயசித்ரா தனது வீட்டில் விஷம் அருந்திவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதை அறிந்த சச்சிதானந்தம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து மதுக்கூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சச்சிதானந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.