தமிழகம் முழுவதும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிக வெற்றி வாய்ப்பு யாருக்கு ? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, “எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது தான் சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளை இணைத்து சிவகாசி மாநகராட்சியாக ஆக்கினோம்.
சிவகாசி சட்டப்பேரவை தொகுதியில் நான் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளேன். எனவே சிவகாசி மாநகராட்சி தேர்தலில், அதிமுக 38 இடங்களுக்கும் மேலாக வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.